லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 4-ம் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் இன்று (திங்கள்கிழமை) மோதுகின்றன. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளுமே புதிய அணிகள் என்பதால் இந்த ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
இதையும் படிக்க | அக்ஷருடன் சிரித்துப் பேசியபடி விளையாடினேன்: மும்பையைத் தோற்கடித்த தில்லி அணியின் லலித் யாதவ்
இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். லாக்கி பெர்குசன், மேத்யூ வேட், டேவிட் மில்லர், ரஷித் கான் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாகக் களமிறங்குகின்றனர்.
லக்னௌவில் எவின் லீவிஸ், குயின்டன் டி காக், துஷ்மந்தா சமீரா ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாகக் களமிறங்குகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.