படம் - www.instagram.com/gmaxi_32/ 
ஐபிஎல்

தமிழ் முறைப்படி திருமணம் செய்த மேக்ஸ்வெல்: சமூகவலைத்தளங்களில் வெளியான காணொலி

காணொலி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

DIN

ஆஸ்திரேலியத் தமிழ்ப் பெண் வினி ராமனை 2017 முதல் காதலித்து வந்தார் மேக்ஸ்வெல். கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணப் புகைப்படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்கள். 

இந்தியப் பெண்ணை மணந்த 2-வது ஆஸி. கிரிக்கெட் வீரர், மேக்ஸ்வெல். இதற்கு முன்பு ஆஸி. வீரர் ஷான் டைட், மஷும் சின்ஹா என்கிற இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தார். 

இந்நிலையில் சென்னையில் மேக்ஸ்வெல் - வினி ராமன் இருவருக்கும் தமிழ் முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. தமிழ்த் திருமணங்களில் உள்ள மூன்று முறை மாலை மாற்றுதல் சடங்கில் மேக்ஸ்வெல்லும் வினி ராமனும் கலந்துகொண்ட காணொலி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் போட்டியில் மேக்ஸ்வெல்லை ரூ. 11 கோடிக்குத் தக்கவைத்துள்ளது ஆர்சிபி அணி. அடுத்தச் சில நாள்களில் அணியினருடன் அவர் இணையவுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்!

ரஷியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி! சீனா வருத்தம்

பத்துக்குப் பத்து.. டி20 உலகக் கோப்பையில் முறியடிக்கக் காத்திருக்கும் 10 சாதனைகள்!

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து! 16 பேர் பலி

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

SCROLL FOR NEXT