ஐபிஎல்

தோனி தலைமையில் களமிறங்கும் சிஎஸ்கே: ஹைதராபாத் பந்து வீச்சு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடனான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடனான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல் போட்டியின் 46வது ஆட்டம் புணேவில் தொடங்கியுள்ளது. இதில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது. 

முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து தோனி தலைமையிலான சென்னை அணி முதலில் விளையாட உள்ளது. சென்னை அணியில் கான்வே, சிம்ரஜித் சிங் ஆகிய இரு வீரர்கள் மாற்று வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். 

ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல்  சிஎஸ்கேவின் கேப்டனாக 2 சீசன்கள் தவிர மொத்தம் 12 சீசன்கள் அணியை சிறப்பாக வழி நடத்தி வந்த தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் அந்த பொறுப்பை ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்திருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூா் சிறப்பு வாகனத் தணிக்கையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்

ரயில் முன் பாய்ந்து மூதாட்டி தற்கொலை

திருச்சியில் பரவலாக மழை

திருப்பத்தூரில் சமத்துவ சகோதரத்துவ பொங்கல் விழா

வீட்டில் போதைப் பொருள் தயாரித்தவா் கைது

SCROLL FOR NEXT