ஐபிஎல்

ஐபிஎல் பிளே-ஆஃப் நடைபெறுவது எங்கு? ஜெய் ஷா தகவல்

DIN


ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று ஆட்டங்கள் ஆமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் ஆட்டங்கள் கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிரத்திலுள்ள 4 மைதானங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. இருப்பினும், டெல்லி கேபிடல்ஸ் அணியில் கரோனா பாதிப்புகள் ஏற்பட்டு இடையில் சிக்கல் உண்டாகியது.

பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் பிசிசிஐயின் முதற்கட்ட அறிவிப்பில் இடம்பெறவில்லை. இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் ஆமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளதாக ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது:

"ஐபிஎல் 2022-இன் பிளே ஆஃப் சுற்று ஆமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும். இறுதி ஆட்டம் நரேந்திர மோடி மைதானத்தில் மே 29-ம் தேதி நடைபெறுகிறது. அதே மைதானத்தில் மே 27-ம் தேதி குவாலிஃபையர் 2 ஆட்டம் நடைபெறும். குவாலிஃபையர் மற்றும் எலிமினேட்டர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் முறைய மே 24 மற்றும் 25-ம் ஆகிய தேதிகள் நடைபெறவுள்ளன.

மகளிர் டி20 சேலஞ்ச் தொடர் இந்த ஆண்டு தொடங்கும். இந்த ஆட்டங்கள் மே 23, மே 24, மே 26 மற்றும் இறுதி ஆட்டம் மே 28-இல் புணேவில் நடைபெறும்" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT