ஐபிஎல்

ரிவியு எடுக்காததால் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

DIN

மும்பை : மும்பை டி ஒய் பாட்டில் மைதானத்தில் ராஜஸ்தான் டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய  போட்டியில் ரிவியு எடுக்காதது தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. 

ராஜஸ்தான் 20 ஓவரில் 160 ரன்களை எடுத்தது. தமிழக வீரர் அஸ்வின் தனது முதல் அரசதத்தை ஐ.பி.எல்.இல் பதிவு செய்தார்.

அடுத்து ஆடிய டெல்லி அணி 18.1 ஓவரில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் மிட்சல் மார்ஷ் அதிகபட்சமாக 89 ரன்களை 62 பந்துகளில் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

டெல்லி அணியின் 3வது ஓவரில் 3வது பந்தை ஏர்க்கராக போல்ட் வீசினார். இந்த பந்தில் எல்பிடபுல்யூக்கு விக்கெட் கேட்கும்போது நடுவர் தர மறுத்து விட்டார். 2 ரிவியுக்கள் மீதமிருந்த நிலையில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் எட்ஜ் என்று நினைத்து அதை அலச்சியமாக விட்டுவிட்டார். ஆனால் பந்து நெராக ஸ்டெம்பை நோக்கி போனது பேடில் பட்டு என்பது பிறகு தான் தெரிந்தது. அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது என்பதை அவர் அப்போது உணரவில்லை. 3 ஓவரிலே மார்ஷ் விக்கெட் எடுத்திருந்தால் ஆட்டமே மாறியிருக்கும்.

மார்ஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது ராஜஸ்தானுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT