ஐபிஎல்

பஞ்சாப்பை வீழ்த்திய தில்லி அணி

DIN

தில்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரின் 64 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டெல்லி அணியில் டேவிட் வார்னர், சர்ஃபராஸ் கான் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் வார்னர் ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். 

அடுத்து வந்த மாா்ஷ், சர்ஃபராஸ் கானுடன் கூட்டணி அமைத்தார். இந்த ஜோடி பெஞ்சாப் அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது. டெல்லி அணியின் ஸ்கோர் 51 ரன்களாக இருந்தபோது சர்ஃபராஸ் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த நிலையில் களம்கண்ட லலித் யாதவும் மிட்செல் மார்ஷுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இருப்பினும் யாதவ், 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 

மறுமுறையில் சிறப்பாக விளையாடிய மார்ஷ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அக்‌ஷர் படேல் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஜானி பேர்ஸ்டோ 15 பந்துகளில் 28 ரன்களும், ஷிகர் தவான் 16 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய பனுகா ராஜபட்ச, லிவிங்ஸ்டன், மயங்க் அகர்வால் ஆகியோர் நம்பிக்கை தரவில்லை. ஜிதேஷ் சர்மா மட்டும் அதிரடி காட்ட 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.

தாகூர் வீசிய பந்தில் ஜிதேஷ் சர்மா டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியாக ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் அவுட் ஆகாமல் இருக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் தில்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT