ஐபிஎல்

கெய்ல், டி வில்லியர்ஸுக்குக் கெளரவம் அளித்த ஆர்சிபி

முன்னாள் வீரர்களான கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு இந்தக் கெளரவத்தை அளிப்பதாக அறிவித்துள்ளது.

DIN

ஹால் ஆஃப் ஃபேம் என்கிற புதிய நடைமுறையை ஐபிஎல் போட்டியில் தொடங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

கிரிக்கெட்டில் அதிகமாகப் பங்களித்தவர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேம்  என்கிற கெளரவம் அளிக்கப்படும். ஐபிஎல் போட்டியில் ஹால் ஆஃப் ஃபேமைத் தொடங்கியுள்ள ஆர்சிபி அணி, முன்னாள் வீரர்களான கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு இந்தக் கெளரவத்தை அளிப்பதாக அறிவித்துள்ளது.

2011-17 வரை ஆர்சிபி அணியில் கெயில் விளையாடியுள்ளார். பிறகு கடந்த வருடம் வரை பஞ்சாப் அணியில் இடம்பெற்றார். 2011 முதல் கடந்த வருடம் வரை ஆர்சிபி அணிக்காக டி வில்லியர்ஸ் விளையாடியுள்ளார். ஹால் ஆஃப் ஃபேம் அறிவிப்பு தொடர்பான விடியோவை ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில் இருவரின் பெயர்களையும் கோலி அறிவித்தார். பிறகு இணையம் வழியாக கெய்லும் டி வில்லியர்ஸும் தங்களுடைய மகிழ்ச்சியை ஆர்சிபி அணியினருடன் பகிர்ந்துகொண்டார்கள். 

ஐபிஎல் 2022 போட்டியில் மே 19 அன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் ஆர்சிபி அணி மோதுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: என்எம்சி அனுமதி

உரப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

50,000 விவசாய மின்இணைப்புகள் வழங்க தமிழக அரசு ஒப்புதல்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

SCROLL FOR NEXT