முகப்பு
ஐபிஎல்

போல்டாகியும் ஆட்டமிழக்காத மேக்ஸ்வெல்: ஆர்சிபி-க்கு அடித்த 'லக்'

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் கிளென் மேக்ஸ்வெல் போல்டாகியும் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
கோப்புப்படம்
பகிர்:


குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் கிளென் மேக்ஸ்வெல் போல்டாகியும் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூருவுக்கு விராட் கோலி மற்றும் பாஃப் டு பிளெஸ்ஸி சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 115 ரன்கள் சேர்த்தது. 34 பந்துகளில் 54 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது டு பிளெஸ்ஸி 44 ரன்களுக்கு ரஷித் கான் சுழலில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அதிரடி காட்ட முயற்சித்தார். ஆனால், பந்து பேட்டில் படவில்லை, ஸ்டம்பில் பட்டது. ஆனால், ஸ்டம்புகளில் இருந்த பைல்ஸ் கீழே விழவில்லை. இதனால், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் தப்பித்தார். மாறாக பெங்களூருவுக்கு அதில் பவுண்டரியும் கிடைத்தது.

தொடக்கம் முதலே அதிர்ஷ்டம் பெங்களூரு பக்கம் வீசியது. அது மேக்ஸ்வெல் விக்கெட்டுக்கும் பலனளித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →