முகப்பு
ஐபிஎல்

ஐபிஎல் எலிமினேட்டர்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான எலிமினேட்டர் ஆட்டம் தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
கோப்புப்படம்
பகிர்:


லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான எலிமினேட்டர் ஆட்டம் தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசன் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. ஆனால், ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக மைதானம் முழுவதும் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன. பெரிதளவில் மழை இல்லாதபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மைதானம் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆட்டம் முழுவதுமாக நடைபெற, குறைந்தபட்சம் இந்திய நேரப்படி இரவு 9.40-க்கு தொடங்க வேண்டும். 

முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே இதே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குவாலிஃபையர் 1 ஆட்டம் எவ்வித இடர்பாடும் இல்லாமல் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →