ஐபிஎல்

சூர்யகுமார் யாதவை ஞாபகப்படுத்தும் ரியான் பராக்: உதவிப் பயிற்சியாளர்

ரியான் பராக்கை பார்க்கும்போது இளம் சூர்யகுமார் யாதவ் நினைவுக்கு வருவதாக ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்கை பார்க்கும்போது இளம் சூர்யகுமார் யாதவ் நினைவுக்கு வருவதாக அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்கை பார்க்கும்போது இளம் சூர்யகுமார் யாதவ் நினைவுக்கு வருவதாக அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரியான் பராக் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவை எனக்கு நினைவுபடுத்துகிறார். ரியான் பராக்கின் ஆட்டம் சூர்யகுமார் யாதவைப் போன்று உள்ளது. அவரிடம் பல திறமைகள் உள்ளன. அவர் இளம் வீரர் (22 வயது) என்றபோதிலும், மூத்த வீரருக்கு உள்ள பக்குவம் அவருக்கு இருக்கிறது என்றார்.

நேற்றையப் போட்டியில் ரியான் பராக் 39 பந்துகளில் 54 ரன்கள் (5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) குவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அருகே கைப்பேசிகள் திருட்டு

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

திருக்குறளைப் படித்தால் வாழ்வியலைக் கற்கலாம்

விஜய்க்கு அரசியல் பக்குவம் இல்லை: மஜக தலைவா் தமிமுன் அன்சாரி

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.5.13 கோடியில் வளா்ச்சிப்பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT