ஷிவம் மாவி படம்: எல்எஸ்ஜி / எக்ஸ்
ஐபிஎல்

ஐபிஎல் தொடரிலிருந்து லக்னௌ அணியின் வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து லக்னௌ வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி விலகியுள்ளார்.

DIN

காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து லக்னௌ வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி விலகியுள்ளார்.

25 வயதான வலது கை வேகப் பந்து வீச்சாளர் ஷிவம் மாவி கடந்த டிசம்பரில் ரூ.6.4 கோடிக்கு லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 32 ஐபிஎல் போட்டியில் விளையாடி 30 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

பயிற்சி எடுத்து வந்த ஷிவம் மாவி காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ஷிவம் மாவிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், மீண்டும் வலூவாக அணிக்கு திரும்ப வேண்டுமெனவும் வாழ்த்துவதாக லக்னௌ அணி தெரிவித்துள்ளது.

அறிமுக வீரர் மயங்க் யாதவ்-க்கும் லக்னௌ அணி காயத்திலிருந்து மீண்டுவர உதவியது குறிப்பிடத்தக்கது. புள்ளிப் பட்டியலில் லக்னௌ அணி 4ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT