ஐபிஎல்

கனவு நனவாகும்போது சிறப்பாக உணர்கிறேன்: ஆட்ட நாயகன் சஷாங்க் சிங்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஆட்ட நாயகன் சஷாங்க் சிங் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

DIN

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஆட்ட நாயகன் சஷாங்க் சிங் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இதற்கு முக்கியம காரணமானவர் 32 வயதான சஷாங்க் சிங். இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது. ஆனால் அவர்கள் அடுக்க நினைத்தது 19 வயது சஷாங்க் சிங். ஆனாலும் பஞ்சாப் அவருக்கு வாய்ப்பளித்தது.

சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வந்த இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். தற்போது பஞ்சாபில் விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் இக்கட்டான சூழலில் 29 பந்துகளில் 61 ரன்கள் அடித்து பஞ்சாப் வெற்றி வித்திட்டார். ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற சஷாங்க் சிங் கூறியதாவது:

இதெல்லாம் நடக்குமென கனவு கண்டிருந்தேன். உண்மையாக நடக்கும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். கிரிக்கெட்டிங் ஷாட் ஆடினேன். பொதுவாக 7வது இடத்தில் களமிறங்குவேன். ஆனால், இன்று (ஏப்.4) 5வது இடத்தில் விளையாடினேன்.பௌன்ஸர்கள் நன்றாக இருந்தது. இரண்டு அணிகளும் 200 ரன்கள் அடித்திருக்கிறதென்றால் ஆடுகளம் அவ்வளவு சிறப்பாக இருப்பதே அர்த்தம்.

குஜராத் பௌலர்களில் சிலர் கிரிக்கெட்டின் லெஜண்டுகள். நான் அவர்களது பெயரினைப் பார்க்கவில்லை. பந்துக்கு ஏற்றவாறு எனது பாணியில் விளையாடினேன். இதற்கு முன்பாக அவ்வளவாக பேட்டிங் கிடைக்கவில்லை. கடைசியாக ஹதராபாத். ஆனால், தற்போது பஞ்சாப் அணியின் பயிற்சியாளர்கள் என்னை மிகவும் ஆதரிக்கிறார்கள். எனக்கும் நம்பிக்கையாக இருக்கிறது எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT