ANI
ஐபிஎல்

மார்க்ரம் அரைசதம்: சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்கடித்தது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை முதலில் பேட் செய்தது.

அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அஜிங்க்யா ரஹானே 35, ஷிவம் துபே 24 ரன்கள் எடுத்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 165 ரன்கள் எடுத்தது. சன் ரைசர்ஸ் தரப்பில் புவனேஸ்வர் குமார், நடராஜன், பாட் கம்மின்ஸ், ஷபாஸ் அகமது மற்றும் ஜெயதேவ் உனத்கட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக மார்க்ராம் 50, அபிஷேக் சர்மா 37 ரன்கள் குவித்தனர்.

சென்னை அணியின் மொயின் அலி 2, தீக்‌ஷனா மற்றும் தீபக் சஹார் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்போது மகிழ்ச்சி இவ்வாறு இருக்கிறது... ருக்மணி வசந்த்!

டபிள்யூடிசி தரவரிசையில் 5-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

மண விழா பொம்மை... ரியா வர்மா!

ஹாங்காங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

தங்க நிறங்கள்... ஷமீன்!

SCROLL FOR NEXT