படம் | ஐபிஎல்
ஐபிஎல்

வெற்றிப் பாதைக்கு திரும்ப ஆர்சிபி இதனை செய்ய வேண்டும்: சுனில் கவாஸ்கர்

ஆர்சிபி அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப அந்த அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப அந்த அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு போட்டியில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர்ச்சியான தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப அந்த அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டாஸை வெல்வது உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், இலக்குகளை துரத்துவதற்கு வாய்ப்புகள் கிடைத்தால் அதனை ஆர்சிபி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களது பேட்டிங் வரிசை வலுவாக இருப்பதால், ஆர்சிபிக்கு சேஸிங் சிறந்த தெரிவாக இருக்கும். சேஸிங் செய்வது அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் என நினைக்கிறேன் என்றார்.

இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு முதலில் பேட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT