விஜயகாந்த் வியாஸ்காந்த்  படம் | சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐபிஎல்

வனிந்து ஹசரங்காவுக்குப் பதில் மாற்று வீரரை அறிவித்த சன் ரைசர்ஸ்!

வனிந்து ஹசரங்காவுக்குப் பதிலாக மாற்று வீரரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

DIN

வனிந்து ஹசரங்காவுக்குப் பதிலாக மாற்று வீரரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்கா விலகுவதாக அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில், அவருக்குப் பதிலாக மாற்று வீரராக இளம் லெக் ஸ்பின்னரான விஜயகாந்த் வியாஸ்காந்தை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த் வியாஸ்காந்த் ரூ. 50 லட்சத்துக்கு சன் ரைசர்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஐபிஎல் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் காயம் காரணமாக விலகிய வனிந்து ஹசரங்காவுக்குப் பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்த் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 வயதாகும் விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணிக்காக ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT