முகப்பு
ஐபிஎல்

150-ஆவது ஐபிஎல் போட்டியில் யுஸ்வேந்திர சஹால்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுஸ்வேந்திர சஹால் 150வது போட்டியில் விளையாடவிருக்கிறார்.

Updated On : 10 ஏப்ரல், 2024 at 3:39 PM
பகிர்:

8 வருடமாக ஆர்சிபி அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சஹால் 2022 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். 32 வயதான இவர் 2022இல் ஊதா நிறத் தொப்பி (அதிக விக்கெட்டுகளுக்காக) விருது வாங்கினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மே.இ. தீவுகள் அணி வீரர் டிவைன் ப்ராவோ 183 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் இருந்தார்.

தற்போது ராஜஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளர் 148 இன்னிங்ஸில் விளையாடியுள்ள யுஸ்வேந்திர சஹால் 195 விக்கெட்டுகள் எடுத்து ப்ராவோவை தாண்டி முதல் இடத்தில் இருக்கிறார்.

148 இன்னிங்ஸில் விளையாடியுள்ள யுஸ்வேந்திர சஹால் 195 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். எகானமி 7.65 என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஐபிஎல் போட்டிகளில் 150வது போட்டியாக களமிறங்கவுள்ளார் சஹால். இதற்காக பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →