ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம்..! ஜடேஜாவுக்கு ஏமாற்றம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டது பற்றி...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் (24 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கேவில் இருந்து ராஜஸ்தான் அணிக்குச் சென்ற ஜடேஜாவுக்கு கேப்டன் வாய்ப்பு இருக்குமெனக் கூறப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2019 முதல் விளையாடி வருகிறார்.
Advertisement
Advertisement
ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு மாறியதால், ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் அணிக்குச் சென்றனர்.
சமீபத்தில் ஐபிஎல் தொடரில் மிகவும் இளமையான கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் 393 ரன்கள் மட்டுமே எடுத்த ரியான் பராக் மீது ராஜஸ்தான் அணி நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை அளித்துள்ளது.
மொத்தமாக 84 ஐபிஎல் போட்டிகளில் ரியான் பராக் 1, 566 ரன்களை 141.84 ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.
ரியான் பராக் 2024 சீசனில் 573 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது அதிகபட்ச ஸ்கோரான 95 ரன்கள் கேகேஆர் அணிக்கு எதிராக அடித்திருக்கிறார்.
ராகுல் திராவிட் விலகிய பிறகு குமார் சங்ககாரா தலைமைப் பயிற்சியாளராகவும் அந்த அணியின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
சிஎஸ்கே அணியில் இருந்து சென்ற மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Talented Assam all-rounder Riyan Parag was on Friday named Rajasthan Royals skipper for the upcoming IPL season, marking a leadership reset after Sanju Samson's switch to Chennai Super Kings.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.