யுஸ்வேந்திர சஹால்  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி சஹால் சாதனை!

ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக மாறி யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.

DIN

ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக மாறி யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது.

200-வது விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் யுஸ்வேந்திர சஹால்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் யுஸ்வேந்திர சஹால் இன்றையப் போட்டியில் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக மாறி அவர் சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் அவர் வலம் வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ 183 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2-வது வீரராக உள்ளார்.

ஐபிஎல் தொடரில் முதலில்...

50 விக்கெட்டுகள் - ஆர்பி சிங் (12 ஏப்ரல் 2010)

100 விக்கெட்டுகள் - லசித் மலிங்கா (18 மே 2013)

150 விக்கெட்டுகள் - லசித் மலிங்கா (6 மே 2017)

200 விக்கெட்டுகள் - யுஸ்வேந்திர சஹால் (22 ஏப்ரல் 2024)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

SCROLL FOR NEXT