படம் | ஐபிஎல்
படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

DIN

ஐபிஎல் தொடரில் மோசமான சாதனைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோஹித் சர்மா சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மோஹித் சர்மா விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டி ஒன்றில் பந்துவீச்சாளர் ஒருவரால் விட்டுக்கொடுக்கப்படும் அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

முன்னதாக சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய பாசில் தம்பி 70 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்த நிலையில், தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனைக்கு மோஹித் சர்மா சொந்தக்காரர் ஆனார்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டி ஒன்றில் பந்துவீச்சாளர்கள் விட்டுக் கொடுத்த அதிகபட்ச ரன்கள்

0/73 - மோஹித் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்) - தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக, 2024

0/70 - பாசில் தம்பி (சன் ரைசர்ஸ்) - பெங்களூருவுக்கு எதிராக, 2018

0/69 - யஸ் தயாள் (குஜராத் டைட்டன்ஸ்) - கொல்கத்தாவுக்கு எதிராக, 2023

0/68 - ரீஸ் டாப்ளே (ஆர்சிபி) - சன் ரைசர்ஸுக்கு எதிராக, 2024

0/66 - இஷாந்த் சர்மா (சன் ரைசர்ஸ்) - சிஎஸ்கேவுக்கு எதிராக, 2013

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT