படம் | ஐபிஎல்
படம் | ஐபிஎல்
ஐபிஎல்

பில் சால்ட், சுனில் நரைன் அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 262 ரன்கள் இலக்கு!

DIN

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். இந்த இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிக்ஸர்களும், பவுண்டரிகளும் சென்ற வண்ணமே இருந்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 138 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரைன் 32 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து பில் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் 12 பந்துகளில் 24 ரன்கள் (2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) , கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 10 பந்துகளில் 28 ரன்கள் (ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள்), வெங்கடேஷ் ஐயர் 23 பந்துகளில் 39 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாம் கரண், ஹர்ஷல் படேல் மற்றும் ராகுல் சஹார் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT