படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

DIN

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றையப் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்துள்ளது. முதல் முறையாக ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 100 சிக்ஸர்களை அடித்து சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 97 சிக்ஸர்கள் அடித்திருந்ததே ஐபிஎல் தொடர் ஒன்றில் அந்த அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT