டேனியல் வெட்டோரி படம் | சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (எக்ஸ்)
ஐபிஎல்

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

இலக்குகளை துரத்திப் பிடிக்கும் திறனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வளர்த்துக் கொள்ள வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

DIN

இலக்குகளை துரத்திப் பிடிக்கும் திறனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வளர்த்துக் கொள்ள வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இலக்குகளை துரத்திப் பிடிக்கும் திறனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வளர்த்துக் கொள்ள வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதலில் பேட் செய்து எதிரணிக்கு இலக்கு நிர்ணயிப்பதில் நாங்கள் வெற்றிகரமான அணியாக உள்ளோம். இலக்குகளை துரத்திப் பிடிப்பதில் நாங்கள் சற்று கவனம் கொடுத்து எங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தோல்வி ஏமாற்றமளிக்கிறது. கடந்த 4 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், நாங்கள் நன்றாகவே விளையாடினோம். ஆட்டத்தின் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தது திருப்புமுனையாக அமைந்தது. இந்த தோல்வி மிகவும் கடினமானது. ஐபிஎல் தொடரில் விளையாடும் எந்த ஒரு அணியும் மற்ற எந்த ஒரு அணியையும் தோற்கடிக்க முடியும். எந்த ஒரு போட்டியும் எளிமையானது கிடையாது என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்த 5 வெற்றிகளில் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணிநீட்டிப்பு

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 24 போ் உயிரிழப்பு

ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்தியவா் கைது

மிஸோரமில் யாசகா்களுக்குத் தடை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

எதிா்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்: பிரதமா் மோடி பெருமிதம்

SCROLL FOR NEXT