சஷாங்க் சிங் Swapan Mahapatra
ஐபிஎல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

பிரபல தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் சஷாங்க் சிங்கினை பாராட்டி பேசியுள்ளார்.

DIN

ஐபிஎல் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 261 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 18.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் விளாசி வென்றது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமான சேஸிங் வெற்றியை இந்த ஆட்டத்தின் மூலம் பதிவு செய்து சாதனை படைத்தது பஞ்சாப்.

28 பந்துகளில் 68 ரன்கள் அடித்து அசத்தினார் சஷாங்க் சிங். பெயர் குழப்பத்தினால் தவறுதலாக பஞ்சாப் அணியில் எடுக்கப்பட்டு மிகவும் அசத்தலாக விளையாடி வருகிறார்.

இது குறித்து ஸ்டெயின், “சஷாங்கிற்காக சந்தோஷயமடைய முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாக எங்களுடன் சன்ரைசர்ஸ் அணியுடன் இருந்தார். மிகவும் கடினமான உழைப்பாளி. சிறந்த வீரர். தன்னுடைய உழைப்பு எல்லாவற்றையும் கொடுப்பவர். எப்போதும் முகத்தில் சிரிப்பை வைத்திருப்பார். சிறப்பாக ஆடினாய் நண்பா! மிகவும் தகுதியானவர்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT