குல்தீப் யாதவ்  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தில்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தில்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் களமிறங்கினர். பிரித்வி ஷா 13 ரன்களிலும், ஜேக் ஃபிரேசர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷாய் ஹோப் (6 ரன்கள்), அபிஷேக் போரெல் (18 ரன்கள்), ரிஷப் பந்த் (27 ரன்கள்), அக்‌ஷர் படேல் (15 ரன்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (4 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் குல்தீப் யாதவ் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் தில்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வைபவ் அரோரா மற்றும் ஹர்சித் ராணா தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் சுனில் நரைன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு

முருகன்குடியில் சன்மாா்க்க கருத்தரங்கம்

SCROLL FOR NEXT