ரோஹித் சர்மா சுதந்திரமாக விளையாடலாம்: ஆரோன் ஃபின்ச்
கேப்டன் பொறுப்பு இல்லாததால் எந்த ஒரு அழுத்தமுமின்றி ரோஹித் சர்மா சுதந்திரமாக விளையாடலாம்.
கேப்டன் பொறுப்பு இல்லாததால் எந்த ஒரு அழுத்தமுமின்றி ரோஹித் சர்மா சுதந்திரமாக விளையாடலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.
மும்பை அணியை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்தவுள்ளார். இந்த நிலையில், ஆரோன் ஃபின்ச் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு அணியை கேப்டனாக நீங்கள் வழிநடத்தினால், எங்கு சென்றாலும் கேப்டனாகவே அறியப்படுவீர்கள். மும்பை அணியின் கேப்டன் என்ற பொறுப்பு தற்போது ரோஹித் சர்மாவுக்கு இல்லை. அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி எந்த ஒரு அழுத்தமுமின்றி சுதந்திரமாக விளையாடலாம் என்றார்.
Advertisement
Advertisement
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தனது முதல் போட்டியில் , குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.