ஷிவம் துபே படம் | ஐபிஎல்
ஐபிஎல்

இதனை தோனியிடம் கற்றுக் கொண்டேன்: ஷிவம் துபே

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதை எம்.எஸ்.தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக ஷிவம் துபே தெரிவித்துள்ளார்.

DIN

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதை எம்.எஸ்.தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக ஷிவம் துபே தெரிவித்துள்ளார்.

17-வது ஐபிஎல் சீசன் நேற்று (மார்ச் 22) கோலகலமாகத் தொடங்கியது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷிவம் துபே இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் முதல் போட்டியில் சிஎஸ்கே எளிதில் வெற்றி பெற்றது. ஷிவம் துபே 34 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதை எம்.எஸ்.தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக ஷிவம் துபே தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.தோனி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் ஆட்டம் சிறப்பானதாக அமைந்தது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதை நான் எம்.எஸ்.தோனியிடமிருந்து கற்றுக் கொண்டேன். இதனை ஒவ்வொரு போட்டியிலும் செயல்படுத்த முயற்சி செய்வேன் என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வருகிற மார்ச் 26 ஆம் தேதி தனது அடுத்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT