ஹார்திக் பாண்டியா படம் | மும்பை இந்தியன்ஸ் (எக்ஸ்)
ஐபிஎல்

முதல் போட்டிக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட விடியோ!

மும்பை அணியின் புதிய கேப்டன் ஹார்திக் பாண்டியா போட்டி தொடங்குவற்கு முன்பு பேசிய விடியோவை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

DIN

மும்பை அணியின் புதிய கேப்டன் ஹார்திக் பாண்டியா போட்டி தொடங்குவற்கு முன்பு பேசிய விடியோவை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஹார்திக் பாண்டியா பேசும் விடியோவினை மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அந்த விடியோவில் ஹார்திக் பாண்டியா பேசியதாவது: மும்பை வீரர்கள் இந்த ஐபிஎல் தொடருக்காக சிறப்பாக தயாராகியிருக்கிறார்கள். அவர்கள் நிறைய கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பயிற்சி ஒருவர் மற்றொருவரைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. அதில் சில அருமையான நினைவுகளை நாங்கள் உருவாக்கினோம். இது நீண்ட தொடர். அதற்கு ஏற்றவாறு எங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளோம். அதே நேரத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்து மிகுந்த உற்சாகத்தில் உள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: திருப்பூர், நொய்டா, சூரத்தில் உற்பத்தி நிறுத்தம்!

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு: தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT