விளம்பரத்துக்காக மட்டுமே எனது பெயர் பயன்படுத்தப்படுகிறது: விராட் கோலி
டி20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த மட்டுமே தனது பெயர் பயன்படுத்தப்படுவதாக இந்திய அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த மட்டுமே தனது பெயர் பயன்படுத்தப்படுவதாக இந்திய அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த நிலையில், உலக அளவில் டி20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த மட்டும் தனது பெயர் பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் திறன் தனக்குள் இன்னும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த மட்டும் எனது பெயர் பயன்படுத்தப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் திறன் என்னுள் இன்னும் இருப்பதாக நினைக்கிறேன் என்றார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறுவாரா, மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.