ஐபிஎல்

மும்பை பந்து வீச்சு; அணியில் ஒரு மாற்றம்: முதல் வெற்றியைப் பெறுமா?

ஹைதராபாத் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச உள்ளது.

DIN

மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் முதல் 7 போட்டிகளும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த மார்ச்.22ஆம் நாள் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்றுவரை 7 போட்டிகளில் நடந்து முடிந்துள்ளன. இதில் விளையாடிய 7 போட்டிகளிலும் சொந்த மண்ணில் (ஹோம் கிரௌவுண்ட் அட்வான்டேஜ்) விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.

மும்பை அணியில் ஒரு மாற்றம் செய்துள்ளதாக பாண்டியா கூறியுள்ளார். பந்து வீச்சாளர் லூக் வுட்க்கு பதிலாக குவேனா மபகா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் அணியில் 2 மாற்றங்கள்: நடராஜன், மார்கோ ஜான்சனுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட், உனத் கட் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

நடராஜனுக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளதாக பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

என்ன ஆனது? எக்ஸ் தளத்தில் டிரெண்டாகும் `டிரம்ப் இஸ் டெட்’ பதிவுகள்!

வம்பிழுத்த திக்வேஷ் ரதி: சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ராணா!

SCROLL FOR NEXT