முகப்பு
ஐபிஎல்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

ஒரு வாரத்துக்கு முன்பாக பேட்டி ஒன்றில் கூறியதை தற்போது செய்து காட்டியுள்ளார் பாட் கம்மின்ஸ்.

Updated On : 28 மார்ச் 2024, 2:43 pm IST
- படம்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
பகிர்:

ஒரு வாரத்துக்கு முன்பாக பேட்டி ஒன்றில் கூறியதை தற்போது செய்து காட்டியுள்ளார் பாட் கம்மின்ஸ்.

மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர். ஒரு வாரத்துக்கு முன்பாக பேட்டி ஒன்றில் கூறியதை தற்போது செய்து காட்டியுள்ளார் பாட் கம்மின்ஸ். அதிரடியான தொடக்கம் தேவை என கூறியிருந்தார். நேற்றையப் போட்டியில் பவர்பிளேவில் 81 ரன்களை அடித்து அசத்தினார்கள் ஹைதராபாத் தொடக்க வீரர்கள்.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய மண்ணில் பல லட்சம் மக்களை அமைதியாக்குவது மிகவும் பிடிக்கும் எனக் கூறி அதேபோல் விராட் கோலி விக்கெட்டினை வீழ்த்தி, மைதானத்தில் இந்திய மக்களை அமைத்தியாக்கினார். இதற்கும் முன்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பினை வென்றார்.

Advertisement

Advertisement

தற்போது ஐபிஎல்-இல் சொன்னதுபோலவே அதிரடியான தொடக்கத்தை ஹைதராபாத் அணி வழங்கியுள்ளது. 2வது முறையாக ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments