வனிந்து ஹசரங்கா  படம் | சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (எக்ஸ்)
ஐபிஎல்

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வனிந்து ஹசரங்கா!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாதின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.

DIN

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாதின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த நிலையில், அகமதாபாதில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக தனது மூன்றாவது போட்டியில் ஹைதராபாத் விளையாடி வருகிறது.

அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்கா இன்றையப் போட்டியில் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து அவர் முழுமையாக விலகியுள்ளார். காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகுவது சன் ரைசர்ஸ் அணிக்கு மிகப் பெரிய இழப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT