ஸ்டீஃபன் ஃபிளமிங் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.

DIN

தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சென்னை அணிக்காக முதல் ஓவரை வீச வந்த தீபக் சஹார் 2 பந்துகளை மட்டுமே வீசினார். மூன்றாவது பந்து வீசுவதற்கு முன்பு அவருக்கு அசௌகரியம் ஏற்பட அவர் பெவிலியன் திரும்பினார்.

இந்த நிலையில், தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தீபக் சஹார்

இது குறித்து அவர் பேசியிருப்பதாவது: வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹாருக்கு பெரிதாக காயம் ஏற்பட்டுள்ளது போல தெரியவில்லை. சிஎஸ்கே அணியின் மருத்துவக் குழு அவரை பரிசோதித்த பிறகு அவருக்கு காயம் ஏற்படுள்ளதாக எனத் தெரிய வரும். தொடர்ச்சியாக அவரது கிரிக்கெட் பயணம் பிஸியாக இருக்கிறது. முதற்கட்டமாக அவரை பரிசோதித்ததில் அவர் நன்றாக உணரவில்லை. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் எந்த அளவுக்கு நலமுடன் இருக்கிறார் என்பது தெரிய வரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT