சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சூப்பர் மேன் என அந்த அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரைன் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஃபார்மில் உள்ளார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 372 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்கள் அடங்கும். அதேபோல பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில், சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சூப்பர் மேன் என அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களது அணியில் ஒருவர் இருக்கிறார். அவரை நாங்கள் சூப்பர் மேன் (சுனில் நரைன்) என அழைப்போம். ஃபீல்டிங், பேட்டிங் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். அவர் அற்புதமாக விளையாடக் கூடியவர். அவர் அணியின் முக்கியமான வீரர். அவர் கொல்கத்தா அணியில் நீண்டகாலமாக இருக்கிறார். கொல்கத்தா அணிக்காக பல ஆண்டுகளாக அவரது பங்களிப்பை சிறப்பாக வழங்கி வருகிறார் என்றார்.
ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.