படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் பியூஸ் சாவ்லா படைத்துள்ளார்.

DIN

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் பியூஸ் சாவ்லா படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான பியூஸ் சாவ்லா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். நேற்றையப் போட்டியில் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பியூஸ் சாவ்லா இதுவரை 184 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ 183 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள்

யுஸ்வேந்திர சஹால் - 200 விக்கெட்டுகள்

பியூஸ் சாவ்லா - 184 விக்கெட்டுகள்

டுவைன் பிராவோ - 183 விக்கெட்டுகள்

புவனேஷ்வர் குமார் - 178 விக்கெட்டுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார் மோதியதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள், மன்னிப்புக் கேட்கிறேன்! - திருமா

சாதிப் பெயர்களை நீக்குவதில் அரசியல் செய்ய வேண்டாம்! - தங்கம் தென்னரசு

'பேடிஎம்' போன் அழைப்பு மோசடி! எப்படி கண்டறிவது?

பூங்காற்று... இஷா தல்வார்!

டெஸ்ட்டில் அதிக 100*..! தோனி, கோலி சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT