அபிஷேக் போரெல்  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேப்பிடல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேப்பிடல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களகிறங்கிய ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் சென்ற வண்ணமே இருந்தது. அதிரடியாக விளையாடிய ஜேக் ஃபிரேசர் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய ஷாய் ஹோப் ஒரு ரன்னில் ரன் அவுட் ஆனார்.

அக்‌ஷர் படேல் 15 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபிஷேக் போரெல் அதிரடி காட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 36 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ரிஷப் பந்த் 15 ரன்களிலும், குல்பதீன் நயீப் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் தில்லி கேப்பிடல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது. தில்லி கேப்பிடல்ஸ் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா மற்றும் யுஸ்வேந்திர சஹால் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT