சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

DIN

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் 51 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ரோஹித் சர்மா

நேற்றையப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதம் விளாசியது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் அடித்த 2-வது சதமாகும். இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் (2 சதங்கள்) அடித்த வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை அவர் சமன் செய்தார்.

ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர்கள்

ரோஹித் சர்மா - 2 சதங்கள்

சூர்யகுமார் யாதவ் - 2 சதங்கள்

சச்சின் டெண்டுல்கர் - ஒரு சதம்

சனத் ஜெயசூர்யா - ஒரு சதம்

லெண்டல் சிம்மன்ஸ் - ஒரு சதம்

கேமரூன் கிரீன் - ஒரு சதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாண்நலந் தொலைவே

தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே

அடகுக் கடையில் அவனுக்கென்ன வேலை?

சிக்கிமில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் பிரேம்சிங் தமாங்!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT