தனிநபர் சதங்களில் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!
நடப்பு ஐபிஎல் தொடரில் தனிநபர் சதங்களில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தனிநபர் சதங்களில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டியில் அணிகள் தங்களுக்குள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 35 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சதமடித்து அசத்தினர்.
Advertisement
Advertisement
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக அளவிலான தனிநபர் சதங்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்டுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் இதுவரை 13 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு 12 சதங்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.
ஐபிஎல் தொடர் ஒன்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் சதங்கள்
13 சதங்கள் - 2024
12 சதங்கள் - 2023
8 சதங்கள் - 2022
7 சதங்கள் - 2016
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.