ஹார்திக் பாண்டியா PTI
ஐபிஎல்

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபில் போட்டியில் விளையாடமாட்டார்.

DIN

இந்த ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு மாற்றப்பட்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கேப்டான மாற்றப்பட்டார்.

இதனால் ரோஹித் சர்மா ரசிகர்கள் விரக்தியடைந்து ஹார்திக் பாண்டியாவை கிண்டல் செய்தனர். ஹார்திக் கேப்டன் ஆனதும் மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும் பிளே ஆஃப்-க்கு தேர்வாகவில்லை. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இதனால் ஹார்த்திக்கின் கேப்டன்சியை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

ஐபிஎல் போட்டியின் 67-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வெள்ளிக்கிழமை இரவு வென்றது.

இந்தப் போட்டியில் மிகவும் மெதுவாக பந்து வீசியதால் ஹார்திக் பாண்டியாவுக்கு ரூ.30 லட்சம் அபாரதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது 3ஆவது முறை என்பதால் இந்த தடை விதிக்கப்படுகிறது.

இந்தாண்டு மும்பை இனிமேல் விளையாடாது என்பதால் அடுத்தாண்டு தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில் ஹார்திக் விளையாடமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT