ரோஹித் சர்மா 
ஐபிஎல்

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பாளர்களை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.

DIN

ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பாளர்களை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பயிற்சியின்போது கிரிக்கெட் வீரர்கள், தங்களது நண்பர்கள் மற்றும் சக வீரர்களிடம் பேசுவதை விடியோ எடுத்து அதனை போட்டி நடைபெறும் நாள்களிலும், அதற்கு பின்பும் வீரர்களின் தனிப்பட்ட விஷயங்களை ஐபிஎல் ஒளிபரப்பாளர்கள் ஒளிபரப்புகின்றர் என அவர் விமர்சித்துள்ளார்.

ரோஹித் சர்மா மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் இருவரும் பேசும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து ரோஹித் சர்மா மிகுந்த ஏமாற்றமடைந்தார். அந்த விடியோவில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தனது எதிர்காலம் குறித்து ரோஹித் சர்மா பேசியதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் ரோஹித் சர்மா வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது: கிரிக்கெட்டர்களின் வாழ்க்கை மிகவும் ஊடுருவப்படுகிறது. கிரிக்கெட் வீரர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் சக வீரர்களிடம் பயிற்சி நாள்களில் அல்லது போட்டி நாள்களில் பேசும் தனிப்பட்ட விஷயங்களை கேமராக்கள் பதிவு செய்கின்றன. எனது உரையாடலை பதிவு செய்ய வேண்டாம் என ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கேட்டுக் கொண்டும், அவர்கள் அதனைப் பதிவு செய்தனர். பின்னர், அது ஒளிபரப்பப்பட்டது.

இது எனது தனிப்பட்ட விஷயங்களை பாதித்துள்ளது. பிரத்யேகமான செய்திகள் மற்றும் அதிக பார்வைகளைப் பெறுவதற்காக செய்யப்படும் இதுபோன்ற விஷயங்கள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே இருக்கும் நம்பிக்கையை உடைத்துவிடும். அதனால், சற்று சிந்தித்து நடந்து கொள்ளலாம் எனப் பதிவிட்டுள்ளார்.

ரோஹித் சர்மா மற்றும் அபிஷேக் நாயர் இடையேயான இந்த உரையாடல் கடந்த மே 11 ஆம் தேதி நடைபெற்றது. ரோஹித் பேசிக் கொண்டிருப்பதை படம் பிடித்த ஒளிப்பதிவாளரிடம், ரோஹித் சர்மா ஆடியோவை பதிவு செய்ய வேண்டாமென தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையேயான இந்த உரையாடல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டு புயலைக் கிளப்பியது. அந்த ஆடியோவில், நடப்பு ஐபிஎல் தொடருடன் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு ரோஹித் சர்மா வெளியேற உள்ளதாகக் கூறியதாக ரசிகர்களிடம் செய்தி பரவியது. அதன்பின் சர்ச்சைக்குரிய அந்த விடியோவை கொல்கத்தா நிர்வாகம் நீக்கியது.

நேற்று முன் தினம் (மே 17) லக்னௌவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் விளையாடியது. அந்த போட்டியின்போது, தவால் குல்கர்னியிடம் ரோஹித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பேசுவது பதிவு செய்யப்படுவதை கவனித்தவுடன், ஒரு ஆடியோ வெளியாகி மிகுந்த பிரச்னையை ஏற்படுத்திவிட்டது. தயவு செய்து ஆடியோவை பதிவு செய்யாதீர்கள் என கைகூப்பிக் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT