குவாஹாட்டி: ஐபிஎல் போட்டியின் 70-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஞாயிற்றுக் கிழமை மோதவிருந்த நிலையில், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
முதலில், இரவு 10.30 மணி வரை ஆட்டம் தொடங்கவில்லை. பின்னர் மழை நின்றதை அடுத்து, 10.30-க்குப் பிறகு டாஸ் வீசப்பட்டது. கொல்கத்தா டாûஸ வென்று பெüலிங்கை தேர்வு செய்தது. இன்னிங்ஸýக்கு 7 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
எனினும் சில நிமிஷங்களிலேயே மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நடப்பு சீசனின் கடைசி லீக் ஆட்டமான இதில் வென்றால் மட்டுமே ராஜஸ்தான் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறும் நிலை இருந்தது.
ஆட்டத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் கொல்கத்தா அணி முதலிடத்திலேயே தொடரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.