திக்வேஷ் ரதி, ரிஷப் பந்த்.  படங்கள்: ஏபி, பிடிஐ
ஐபிஎல்

லக்னௌ கேப்டனுக்கு அபராதம்: 2-ஆவது முறையாக திக்வேஷுக்கு அபராதம்!

மெதுவாக பந்துவீசியதற்காக லக்னௌ கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

மெதுவாக பந்துவீசியதற்காக லக்னௌ கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் உடனான நேற்றைய போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் ரிஷப் பந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான 20ஆவது ஓவரிலும் 4 ஃபீல்டர்கள் மட்டுமே வெளியே வைக்க வேண்டியிருந்தது. அப்படி இருந்தும் ஆவேஷ் கான் சிறப்பாக பந்து வீசினார்.

ரிஷப் பந்த்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக 2 முறை இந்தமாதிரி நடைபெற்றால் அடுத்த ஒரு போட்டியில் கேப்டன் நீக்கப்படுவார்.

சமீபத்திய புதிய விதிகளின்படி அபராதம் மற்றும் தகுதிக் குறைப்பு புள்ளிகள் (டீமெரிட் பாயிண்ட்ஸ்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நோட்புக் டிக் கொண்டாடிய திக்வேஷ் ரதி.

லக்னௌ சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதிக்கு மீண்டும் தனது பாணியான நோட்புக் டிக் கொண்டாட்டத்துக்காக போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

திக்வேஷுக்கு முந்தைய போட்டியிலும் இதேமாதிரி அபராதம் விதிக்கப்பட்டது. இவர், மொத்தமாக 2 தகுதிக் குறைப்பு புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

திக்வேஷ் ரதி ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் பேரவை தீா்மானம்

நாளைய மின்தடை

‘செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்’

மாநகராட்சி பள்ளிகளில் 1,747 தூய்மை பணியாளா்களை நியமிக்க முடிவு: மாமன்றக் கூட்டத்திலிருந்து கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் வெளிநடப்பு

நாளை 2 மின்சார ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT