ஹார்திக் பாண்டியா.. 
ஐபிஎல்

டி20-யில் 200* விக்கெட்டுகள்: சாதனை படைத்த ஹார்திக் பாண்டியா!

டி20-யில் 200* விக்கெட்டுகள்: சாதனை படைத்த ஹார்திக் பாண்டியா!

DIN

அனைத்துவிதமான டி20 போட்டிகளிலும் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹார்திக் பாண்டியா சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. மும்பை அணித் தரப்பில் கேப்டன் ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் 200 கடந்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். இதுவரை 290 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹார்திக் பாண்டியா 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 5390 ரன்களும் குவித்திருக்கிறார்.

5000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் உலகளவில் 7-வது இடத்தில் ஹார்திக் பாண்டியா உள்ளார். இந்தத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஹார்திக் 10 விக்கெட்டுகளுடன் உதா நிறத் தொப்பியையும் தன்வசமாக்கியுள்ளார்.

இதையும் படிக்க: ஐபிஎல் போட்டிகளில் 2,500 ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைத்தேன் சொல்கிறேன் செய்கிறேன்... சமந்தா!

அறிமுகம் தேவையில்லை... சாக்‌ஷி அகர்வால்!

வெய்யிலைத் தேடிச் சென்றால் மழை... ஆம்னா ஷரீப்!

மூன்று ரோஜாக்கள்... தீப்ஷிகா!

பச்சைக் குயில்... கரிஷ்மா டன்னா!

SCROLL FOR NEXT