ஆர். அஸ்வின். படம்: எக்ஸ் / சிஎஸ்கே
ஐபிஎல்

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்: புவனேஷ்வர் குமாரை முந்திய அஸ்வின்!

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் அஸ்வின் நுழைந்தது குறித்து...

DIN

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமாரை முந்தினார் ஆர். அஸ்வின்.

தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக இந்த ஐபிஎல் 2025-இல் இருந்து விளையாடி வருகிறார்.

தற்போது நடைபெற்றுவரும் பஞ்சாப் உடனான போட்டியில் ஆர். அஸ்வின் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 185 விக்கெட்டுகளுடன் புவனேஷ்வர் குமாரை முந்தினார்.

நேற்றுதான் (மார்ச்.7) புவனேஷ்வர் குமார் 184 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார்.

இதன் மூலம், ஆர். அஸ்வின் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் (185) எடுத்தவர்கள் பட்டியலில் 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அஸ்வின் வீசிய கடைசி ஓவரில் முகேஷ் எளிமையான கேட்சை தவறவிட்டார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள்

1. சஹால் - 206

2. சாவ்லா - 192

3. அஸ்வின் - 185

4. புவனேஷ் - 184

5. ப்ராவோ - 183

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைக் கொண்டு உக்ரைனுக்கு நிதியுதவி: ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் தீவிர ஆலோசனை

286 கோடி டாலராக அதிகரித்த இந்திய ஜவுளி உற்பத்தி

தமிழகத்தில் ஒருவா் கூட ஆா்டா்லிகளாக இல்லை: டிஜிபி அறிக்கையில் தாக்கல்

அகிலபார நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கக் கூட்டம்

மதுரையில் காவலா் நிழல் குடை அறையில் ஆட்டோ ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை

SCROLL FOR NEXT