சுழல் பந்துவீச்சாளர் ஹசரங்கா இல்லாதது ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 217/6 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தானின் முக்கியமான சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா பங்கேற்கவில்லை. தனிப்பட்ட காரணங்களினால் பங்கேற்கவில்லை என சஞ்சு சாம்சன் தெரிவித்திருந்தார்.
அவருக்குப் பதிலாக அணியில் இணைந்த ஃபசல்லஹ் ஃபரூக்கி 4 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 38 ரன்களை கொடுத்தார்.
சஞ்சு சாம்சன் 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் இது குறித்து கூறியதாவது:
மிடில் ஓவரில் விக்கெட் எடுக்கும் ஹசரங்காவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் மிஸ் செய்தது.
மற்றுமொரு சுழல் பந்து வீச்சாளரான தீக்ஷனா 2 விக்கெட்டுகள் எடுத்தாலும் அவரால் எதிரணிக்கு எந்த அழுத்தத்தையும் அளிக்க முடியவில்லை.
தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே தலா 50க்கும் அதிகமான ரன்களை வாரி வழங்கினார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.