முகப்பு
ஐபிஎல்

துருவ் ஜுரல் பேட்டினை பரிசோதித்த நடுவர்! காரணம் என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரின் பேட்டினை பரிசோதித்தது குறித்து...

Updated On : 13 ஏப்ரல் 2025, 5:49 pm IST
துருவ் ஜுரல் பேட்டினை பரிசோதித்த நடுவர் - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்
பகிர்:

ஜெய்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரின் பேட்டினை நடுவர் பரிசோதித்தது பேசுபொருளாகியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 173/4 ரன்கள் குவித்தது.

13.2ஆவது பந்தில் ரியான் பராக் ஆட்டமிழந்தார். அடுத்ததாக துருவ் ஜுரெல் களமிறங்கினார். இவரது பேட்டினை நடுவர் பரிசோதித்து பார்த்தார்.

Advertisement

Advertisement

தன்னிடமுள்ள ஒரு கருவியைப் பயன்படுத்தி பேட்டின் வடிவத்தைப் பரிசோதித்தார்.

ஏன் இந்தப் பரிசோதனை?

நடுவர்கள் போட்டியின் எந்தச் சூழ்நிலையிலும் வீரர்களின் பேட்டினை பரிசோதிக்கலாம் என்ற புதிய ஐபிஎல்-இன் விதியின்படியே இப்படி செய்யப்பட்டது.

பேட்டின் வடிவம், அளவு குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருக்க வேண்டும்.

  • பேட்டின் நீளம்: ஒரு கிரிக்கெட் பேட்டின் நீளம் அதிகபட்சமாக 38 அங்குலத்தை (965 மி.மீ) தாண்டக் கூடாது.

  • பேட்டின் மற்ற அளவுகள்: கிரிக்கெட் பேட்டுக்கென சில அளவுகள் இருக்கின்றன.

    • அகலம்:  4.25 அங்குலத்தை (108 மி.மீ.) மீறக்கூடாது.

    • ஆழம்: 2.64 அங்குலத்தை (2.64 மி.மீ.) தாண்டக் கூடாது.

    • முனைகள் : 1.5 அங்குலத்தை (40 மி.மீ.) தாண்டக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments