அக்‌ஷர் படேல் படம் | AP
ஐபிஎல்

தில்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்‌ஷர் படேலுக்கு அபராதம்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நேற்று (ஏப்ரல் 13) நடைபெற்ற போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது.

இந்த போட்டியில் மெதுவாக பந்துவீசியதன் காரணத்தினால் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேலுக்கு பிசிசிஐ தரப்பில் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டாடா ஐபிஎல் தொடரின் 29-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் விளையாடியது. இந்தப் போட்டியில் தில்லி அணியின் கேப்டன் அக்‌ஷர் படேல் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், தில்லி அணிக்கு விதி 2.22-ன் படி ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மெதுவாக பந்துவீசிய காரணத்துக்காக முதல் முறையாக தில்லி கேபிடல்ஸுக்கு அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தமாய் ஈர்ப்பதால் பெயரிலேயே காந்தம்: ரஜினிக்கு சீமான் வாழ்த்து!

சென்னையில் 2 நாள்களுக்கு பனிமூட்டம்: டிச.18 வரை மிதமான மழை!

சருமத்தில் தேவையற்ற முடி உள்ளதா? இயற்கையான தீர்வு இதோ!

சிகரெட்டாக இருந்தாலும்... ரஜினியிடமிருந்து ஷாருக்கான் கற்றுக்கொண்ட விஷயம்!

டிரம்பின் தங்க அட்டை திட்டம்! அப்ளை நௌ என்றால் உடனே குடியுரிமை என அர்த்தமில்லையா?

SCROLL FOR NEXT