சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கையில் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை என பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க: எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன்: கருண் நாயர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது அந்த அணிக்கு மிகப் பெரிய கவலையாக மாறியுள்ளது. காயம் காரணமாக அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். தோனி மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். ஷிவம் துபேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஃபிளெமிங் கூறியதென்ன?
தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னௌவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இன்றையப் போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில், சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு குறைந்துவிடும்.
முக்கியமான போட்டியில் விளையாடவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கையில் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை என பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸை கேப்டனாக வழிநடத்தும் பொறுப்பை எம்.எஸ்.தோனி ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் அணியை வழிநடத்துவது மிகவும் முக்கியம். ஆனால், அவரிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை. அவருடன் இணைந்து அணி வீரர்கள் கடின உழைப்பை வழங்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஏற்கனவே இதுபோன்ற சூழல்களில் இருந்துள்ளோம். இந்த சூழலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்ப நிறைய ஆற்றல் தேவைப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.