டெவால்ட் ப்ரீவிஸ்ஸின் இன்ஸ்டா பதிவு. படங்கள்: இன்ஸ்டா / டெவால்ட் ப்ரீவிஸ்
ஐபிஎல்

சிஎஸ்கேவில் இணைந்தார் குட்டி ஏபிடி வில்லியர்ஸ்: சிஎஸ்கே அணி அறிவிப்பு!

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் சிஎஸ்கே அணியில் இணைந்தார்.

DIN

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு சிஎஸ்கே ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டிய நிலையில் தற்போது உண்மையாகிவிட்டது.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ’குட்டி ஏபிடி’ என்றழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் முன்னாள் தெ.ஆ. வீரரைப் போன்று அதிரடியாக 360 டிகிரியிலும் பேட்டிங் செய்கிறார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் எந்த ஒரு அணியும் அவரை ஏலத்தில் எடுக்காமல் இருந்த இவர் இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.

அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மஞ்சள் நிற புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

இதனால், இவர் சிஎஸ்கேவில் இணைகிறாரா எனக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 21 வயதாகும் இவரை தற்போது, 8ஆவது வெளிநாட்டு வீரராக சிஎஸ்கே அணி தேர்வு செய்துள்ளது.

ஏலத்தில் 7 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இருந்தனர். குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக தற்போது, 8ஆவது வீரராக இவரை சிஎஸ்கே எடுத்துள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு நீண்ட நாள்களாக நன்றாக தொடக்க வீரர்களும் மிடில் ஆர்டர் பேட்டர்களும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

ஷேக் ரஷீத் தொடக்க வீரராக களமிறங்கிய பின்னர் அந்தக் குறை ஓரளவுக்கு சரியாகியுள்ளதால், டெவால்ட் ப்ரீவிஸ் அணியில் தேர்வாகியுள்ளதால் சிஎஸ்கே அணிக்கு சிறந்த மிடில் ஆர்டர் ஒருவர் கிடைத்த மாதிரிதான் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டெவால்ட் ப்ரீவிஸ் 230 ரன்களை 133.72 ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

இந்நிலையில், சிஎஸ்கே அணி டெவால்ட் ப்ரீவிஸ் அணியில் இணைந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT