க்ளென் பிலிப்ஸ், தசுன் ஷானகா. படங்கள்: எக்ஸ் / குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல்

க்ளென் பிலிப்ஸுக்கு மாற்றாக இலங்கை வீரர்!

காயத்தினால் வெளியேறிய க்ளென் பிலிப்ஸுக்குப் பதிலாக தசுன் ஷானகா தேர்வாகியுள்ளார்.

DIN

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸ் காயத்தினால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக இலங்கை வீரர் தசுன் ஷானகா தேர்வாகியுள்ளார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்த க்ளென் பிலிப்ஸ் தொடைத் தசையில் ஏற்பட்ட காயத்தினால் இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டார்.

ஒரு போட்டியில்கூட விளையாடாத சிறந்த பேட்டர், ஃபீல்டர், சுழல்பந்துகளை வீசக்கூடிய பிலிப்ஸ் சிறந்த ஆல்-ரவுண்டர் என்பது கவனிக்கத்தக்கது.

தற்போது, இவருக்குப் பதிலாக இலங்கையின் ஆல்ரவுண்டர் தசுன் ஷானகாவை குஜராத் அணி தேர்வு செய்துள்ளது.

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் ஷானகா குஜராத் அணியில் விளையாடினார்.

102 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷானகா 1,456 ரன்கள் 33 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

குஜ்ராத் அணி ஷானகாவை ரூ.75 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

ஜேஎன்யு போன்ற சம்பவங்களால் தேசம் அதிா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT