சஹால் உடன் ஷ்ரேயாஸ் ஐயர். படம்: பிடிஐ
ஐபிஎல்

சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்

ஆர்சிபிக்கு எதிராக வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது...

DIN

பெங்களூரில் நேற்றிரவு மழையின் காரணமாக 14 ஓவர்கள் போட்டியாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 95/9 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 98/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சஹால் 2 விக்கெட்டுகள் எடுத்து 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

சின்னசாமி திடலில் 54 விக்கெட்டுகள் அசத்திய சஹால், ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது:

இந்தத் திடலில் சிக்ஸர் அடிக்க கடினமாக இருந்தது. நேஹல் வதேரா சிறப்பாக விளையாடினார். அவர் தனது ஃபார்மை தொடருவார் என நினைக்கிறேன். பந்துவீச்சாளர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் நான் சஹாலுடன் பேசினேன். அவரிம் ‘நீங்கள்தான் ஆட்டத்தை வென்று கொடுப்பவர். அதனால் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விக்கெட் எடுங்கள்’ எனக் கூறினேன்.

உங்களது அணுகுமுறைகளில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதில்லை. அவரால் எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தினுள் திரும்பி வர முடியும். அதனால்தான் நாம் அவரை லெக்ஸ்பின்னராக பாராட்டுகிறோம்.

அநேகமாக ஐந்த 2025 ஐபிஎல்-இல் இதுவரை சஹால்தான் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். பிட்ச்சை பொருத்துதான் அது த்ரில்லராக மாறுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சக்சஸ் உங்கள் சாய்ஸ்!

நாய்வால் (சிறுகதைகள்)

தமிழக டிஜிபி விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஓர்மைகள் மறக்குமோ!

"எல்லோரும் ஒன்றிணைந்தால்தான் ஜெயிக்க முடியும் என எல்லா தலைவர்களிடமும் பேசியிருக்கேன்"

SCROLL FOR NEXT